புத்துணர்வும் புதிய நம்பிக்கையும் ஏற்பட தமிழ்நாடு முஸ்லிம் லீக் தமிழ் புத்தாண்டு வாழ்த்து - வி.எம்.எஸ்.முஸ்தபா

" alt="" aria-hidden="true" />


புத்துணர்வும், புதிய நம்பிக்கையும், மகிழ்ச்சியும் ஏற்படுவதற்காக அயராது உழைப்போம் என தமிழ்புத்தாண்டில் உறுதியேற்போம்.என தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் - 


தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவற்கொரு குணமுண்டு; அமிழ்தம் அவனுடைய வழியாகும்; அன்பே அவனுடை மொழியாகும்" என்ற நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் கருத்திற்கிணங்க, தொன்மையிலும், பன்முகத்தன்மையிலும், ஈடு இணையில்லா பண்பாட்டுப் பெருமை கொண்ட தமிழ் மக்கள் பண்டைக்காலம் தொட்டு சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு நாளாக உற்சாகமாய்க் கொண்டாடி வருகிறார்கள்.


தமிழக மக்களின் உள்ளத்திலும், எண்ணத்திலும் புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளித்திடும் இப்புத்தாண்டில் நாம் அனைவரும் ஒருமித்து உழைத்து, தடைகளைத் தகர்த்து, புதிய சாதனைகளைப் படைத்து, வளமிக்க தமிழகத்தை உருவாக்கிட உறுதியேற்போம்.


சங்க காலம் முதல் சமகாலம் வரை தமிழர்களின் தனித்த பண்பாட்டு கூறுகளை எடுத்தியம்பும் இந்த சித்திரை திங்கள் உலகெங்கும் வாழும் தமிழர்தம் வாழ்வில் எல்லா வளங்களையும், நலங்களையும் கொண்டுவந்து சேர்ப்பதாக அமையட்டும். சித்திரை பிறந்தால் நித்திரை கலையும் என்ற முதுமொழிக்கு ஏற்ப முதல் மாதத்தில் பிறக்கும் உற்சாகம் வருடம் முழுவதும் தொடர வேண்டும் என இறைவனை பிராத்திப்போம்.


தமிழக மக்களை சூழ்ந்திருக்கும் எல்லா தீமைகளும் விரைவில் அகலும். வாழ்விலும் புத்துணர்வும், புதிய நம்பிக்கையும், மகிழ்ச்சியும் ஏற்படுவதற்காக அயராது உழைப்போம் என்று இந்நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்றுக்கொள்வோம். என கூறி உள்ளார்